Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு அரசு அறிவிப்பு..!

Maldives

Mahendran

, திங்கள், 16 செப்டம்பர் 2024 (12:03 IST)
இந்தியா மாலத்தீவு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இரு நாடுகள் இடையே எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் இரு நாடுகளுக்கு இடையே இருந்த தவறான புரிதல்கள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டது என்றும் மாலத்தீவு வெளியுறத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்த போது மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேறும்படி அதிபர் முஹம்மது முய்சு உத்தரவிட்டதை தொடர்ந்து இருநாட்டு உறவுகள் விரிசல் ஏற்பட்டதாகவும் இந்தியாவுடன் எங்களுக்கு இருந்த கசப்பான உறவு தற்போது பேசி தீர்க்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.

சீனா மற்றும் இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவை கொண்டுள்ளோம் என்றும் இரு நாடுகளும் எங்களை ஆதரிக்கின்றன என்று தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக மாலத்தீவு இந்தியா இடையே உறவில் விரிசல் இருந்த நிலையில் பிரதமர் மோடி திடீரென லட்சத்தீவுக்கு பயணம் செய்தார்.

இதையடுத்து இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்பவர்கள் லட்சத்தீவுக்கு சென்றதால் மாலத்தீவு சுற்றுலா வருமானம் பெறும் அளவு பாதித்தது. இந்த நிலையில் தான் தற்போது மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய அளவில் மதுவிலக்கு.. முதல்வரை சந்திக்கும் முன் திருமாவளவன் பேட்டி..!