Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14வது முறையாக டாஸ் தோற்று புதிய சாதனை! ரோஹித் சர்மாவுக்கு வந்த சோதனை!

Prasanth Karthick
செவ்வாய், 4 மார்ச் 2025 (14:47 IST)

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

 

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இதற்காக டாஸ் போடப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதன்மூலமாக சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 14வது முறையாக டாஸ் தோற்றுள்ளது இந்திய அணி.

 

தொடர்ச்சியாக அதிகமுறை டாஸ் தோற்ற அணிகளில் முதல் இடத்தில் உள்ளது இந்தியா. கடந்த 2023ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் தொடங்கிய இந்தியாவின் டாஸ் தோல்வி ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வரை தொடர்கிறது. இந்த 14 முறையில் ரோகித் சர்மா 11 முறை டாஸ் தோற்றுள்ளார். கே.எல் ராகுல் 3 முறை தோற்றுள்ளார். 

 

அதிகமுறை டாஸ் தோற்ற கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 12 முறை டாஸ் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ப்ரையன் லாரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முக்கிய முடிவு..!

யாரையும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது.. கங்குலி நம்பிக்கை!

இந்த மஞ்ச சட்டைக்காரங்களப் பாத்தாதான் பயம்… சுரேஷ் ரெய்னா பதிவு!

ஆஸ்திரேலியாவை வெல்ல இதைதான் செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் சொல்லும் அறிவுரை!

டிராவிஸ் ஹெட் இன்றும் அதிரடியாக ஆடுவார்… ஆஸி. கேப்டன் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments