Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷப் பாண்டிற்கு ஓய்வு கிடைப்பதில்லை -குடும்பத்தினர் குற்றச்சாட்டு

Advertiesment
rishab pant
, திங்கள், 2 ஜனவரி 2023 (15:07 IST)
கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டிற்கு  ஓய்வு கிடைப்பதில்லை என்று அவர் குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, தடுப்பு பலகையின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டின் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ: நீ விரைவில் குணமடைய பிரார்திக்கிறேன்- விராட் கோலி டுவீட்
 
எனவே, அவர் விரைவில் குணமடைய வேண்டுமென சக வீரர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி படுமாயம் அடைந்துள்ள ரிஷப் பண்டிற்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை எனவும், பலரும் ஆறுதல்கூறி வருவது, ரிஷப் பண்டின் ஆற்றலைக்குறைக்கலாம் என மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதாக அவாது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித் கேப்டன்சிக்கு இப்போதைக்கு சிக்கல் இல்லை… பிசிசிஐ தரப்பு தகவல்!