Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடினமான சூழலில் கோலி போன்றவர்கள் கற்றுத் தருவார்கள்.. ரிஷப் பண்ட்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (15:28 IST)
இந்திய அணியில் ஆறாவது வீரராக ரிஷப் பண்ட் இறங்குவாரா இல்லை கோலி இறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆடும் லெவனில் ஆறாவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்பதுதான் இந்திய அணியில் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக உற்சாகத்தோடு காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் கோலியுடன் இணைந்து விளையாடிய இன்னிங்ஸைக் குறிப்பிட்டு “கஷ்டமான சூழலில் கோலி போன்ற மூத்த வீரருடன் விளையாடுவது உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கும். நான் அந்த போட்டியில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசியதை நினைத்துக் கொள்கிறேன்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எப்போதும் விதிவிலக்கானது. மக்கள் கூட்டம் ரசிகர்களின் உணர்ச்சி என தேசிய கீதம் பாடும்போதே எனக்கு மயிர்கூச்செரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments