Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச வீரரை பாடி ஷேமிங் செய்தாரா ரிஷப் பண்ட்?... கிளம்பிய சர்ச்சை!

vinoth
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:38 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது கிரிக்கெட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற்று வரும் நிலையில், மழை காரணமாக முதல் மூன்று நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று  நான்காவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி மளமளவென விக்கெட்களை இழந்து 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதையடுத்து அதிரடியாக இந்திய அணி 285 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் பங்களதேஷ் 3 விக்கெட்களை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களை இந்திய பேட்ஸ்மேன்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வங்கதேச அணி பேட் செய்யும் போது அந்த அணியின் வீரர் மொமினுல் குறித்து ரிஷப் பண்ட் அடித்த கமெண்ட் சர்ச்சையைக் கிளப்பியது. மொமினுல் உயரம் குறைவான வீரர் என்பதால் அவர் தடுப்பாட்டத்தில் ஈடுபடும்போது பந்து தலையில் பட்டாலும் எல் பி டபுள் யு முறையில் விக்கெட் கொடுக்கவேண்டும் என கீப்பிங் நின்ற ரிஷப் பண்ட் கூறினார். அவரின் இந்த கமெண்ட் தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments