Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடிக்கப் போவது யார்?.. ரிக்கி பாண்டிங் கணிப்பு!

vinoth
வியாழன், 7 நவம்பர் 2024 (08:45 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி நியுசிலாந்திடம் வொயிட்வாஷ் ஆனது இதுதான் முதல் முறை.

இதையடுத்து டிசம்பர் மாதம் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் மீதான அழுத்தம் கூடியுள்ளது. அந்த தொடரில் 4 போட்டிகளையாவது வென்றால்தான் இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற முடியும்.

இந்நிலையில் இந்த தொடரில் எந்த வீரர் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டீவ் ஸ்மித் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் அதிக ரன்கள் சேர்ப்பார் என்றும், ஜோஷ் ஹேசில்வுட் அதிக விக்கெட்கள் வீழ்த்துவார் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments