Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஹித் ஷர்மாவின் முடிவைக் கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

ரோஹித் ஷர்மாவின் முடிவைக் கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

vinoth

, செவ்வாய், 5 நவம்பர் 2024 (13:53 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது. இன்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள கேப்டன் ரோஹித் ஷர்மா “நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.  நியுசிலாந்து அணி எங்களை விட எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினர். நான் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சரியாக விளையாடவில்லை.  ஒரு அணியாக நாங்கள் சரியாக விளையாடத் தவறிவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார். ஆனாலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ஒரு தொடரின் முதல் போட்டியில் கேப்டன் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தால் அது பரவாயில்லை. கேப்டன் விளையாடவில்லை என்றால் அது அந்த போட்டியை வழிநடத்தும் கேப்டனுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் வென்ற வீராங்கனை ஒரு ஆண்! வெளியான மருத்துவ ரிப்போர்ட்! - பதக்கத்தை திரும்ப பெறுமா ஒலிம்பிக்ஸ் கமிட்டி?