Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ராவுக்கு ஓய்வு.. கே.எல்.ராகுல் வரமாட்டார்..! பிசிசிஐ அறிவிப்பு! – 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சிக்கலா?

Prasanth Karthick
புதன், 21 பிப்ரவரி 2024 (09:12 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் அணியில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.



இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா 1-1 என்ற வெற்றிக் கணக்கில் சமநிலையில் இருந்தன. சமீபத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

அடுத்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜாஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 டெஸ்ட் தொடர்களிலும் அவர் விளையாடி வரும் நிலையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அணியில் இல்லாத கே.எல்.ராகுலும் 4வது டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் உடல்தகுதியை பரிசோதித்த பின் இறுதி போட்டியில் வர வாய்ப்பிருக்கலாம் என கூறப்படுகிறது.

ALSO READ: நம்ம எண்ட்ரி வேற மாதிரி இருக்கும்… ரிஷப் பண்ட் குறித்து வெளியான தகவல்!

ஜாஸ்ப்ரிட் பும்ராவுக்கு பதிலாக அணியில் முகேஷ் குமார் அல்லது ஆகாஷ் தீப் ஆகிய வீரர்களில் ஒருவர் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. அணியில் ஏற்படும் இந்த மாற்றங்கள் 4வது டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவாஸ்கர் அப்படி பேசியிருக்கக் கூடாது… ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ஆஸி.வீரர்!

அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகள் விளையாட தடை… நடவடிக்கை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வாரியம்!

அந்த நாலு செல்லத்தையும் எப்படியாவது எடுத்துடுங்க… ஆர் சி பி அணிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை!

கேப்டனிடம் கோபித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஸாரி ஜோசப்!

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments