Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தோற்க காரணமான அந்த நோ பால்....

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (17:52 IST)
இந்தியா அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. 
 
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. தவான் சதம் விளாசி ஆசத்தினார். கேப்டன் கோலி 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பரிக்க அணி களமிறங்கியது. 
 
தென் ஆப்பரிக்க பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் தென் ஆப்பரிக்க அதிரடியாக ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
தென் ஆப்பரிக்க, டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18 வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர் 8 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் க்ளீன் போல்டானார். 
 
ஆனால் சாஹல் நோ பால் வீசினார். இதில் இருந்து தப்பித்த மில்லர், அடித்து அதிரடியாக விளையாடினார். மில்லரின் அதிரடி ஆட்டம் போட்டியின் போக்கையே மாற்றியது. 
 
சாஹல் நோ பால் வீசாமல் இருந்து இருந்தால், மில்லர் அவுடாகியிருந்தால் இந்தியாவின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். இந்த நோ பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

பெங்களூர் அணியினரைக் கட்டியணைத்து நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி… எதற்குத் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments