Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனையை தவறிவிட்ட இந்தியா; கலக்கிய தென் ஆப்பரிக்கா

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (12:34 IST)
நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி அசத்தலான வெற்றி பெற்றது.



இந்தியா அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. 100வது ஒருநாள் போட்டியில் ஆடிய தவான் சதம் விளாசி ஆசத்தினார். கேப்டன் கோலி 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பரிக்க அணி களமிறங்கியது.
 
தென் ஆப்பரிக்க பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதில் தென் ஆப்பரிக்க அதிரடியாக ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
தென் ஆப்பரிக்க அணி பிங்க் ஜெர்சி அணிந்து ஆடிய இதுவரை தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் தென் ஆப்பரிக்க அணி பிங்க் ஜெர்சி அணிந்து விளையாடியது. போட்டியிலும் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments