Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திண்டுக்கல் ட்ராகன்ஸில் இணையும் அஸ்வின்! – கலகலக்க போகும் டிஎன்பிஎல் போட்டிகள்!

Advertiesment
TNPL 2023
, புதன், 14 ஜூன் 2023 (15:25 IST)
உலக டெஸ்ட் சாம்பியம்ஷிப் போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா திரும்பு அஸ்வின் டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான பந்து வீச்சாளராக உள்ளவர் ரவிச்சந்திரன் அஸ்வின். சமீபத்தில் லண்டனில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அஸ்வினும் சென்றிருந்த நிலையில் ஆடும் 11 அணியில் அவர் செலக்ட் செய்யப்படவில்லை. இந்தியாவின் தோல்விக்கு பிறகு இது மிகவும் சர்ச்சையானது.

இந்நிலையில் தற்போது நாடு திரும்பி கொண்டிருக்கும் அஸ்வின் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ”டிஎன்பிஎல் அழைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். கடந்த டிஎன்பிஎல் சீசன்களிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் டிஎன்பிஎல் சீசனில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியில் இருந்தார். ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணிக்காக விளையாடினார்.

ஆனால் இந்த முறை ஆட்டம் முழுமைக்கும் அவர் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியில் தமிழக இளம் வீரர் வருண் சக்ரவர்த்தியும் உள்ளார். இந்த திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி இன்று ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோத உள்ள நிலையில் இதில் அஸ்வினும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிரணியான திருச்சி ரூபி வாரியர்ஸில் நடராஜன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியை துறக்கிறாரா ரோஹித்?