Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அந்த முடிவை எடுத்தால் பாகிஸ்தான் உலகக் கோப்பையில் விளையாடாது… ரமீஸ் ராஜா தடாலடி!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (14:59 IST)
இந்திய அணி ஆசியக் கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்லாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா “இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து ஆசியக் கோப்பையில் விளையாடாவிட்டால், பாகிஸ்தானும், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வந்து உலகக்கோப்பையில் விளையாடாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments