Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“அந்த நாள் போல என்றுமே எனர்ஜியை உணர்ந்ததில்லை…” கோலி நெகிழ்ச்சி பதிவு!

Advertiesment
இந்தியா
, சனி, 26 நவம்பர் 2022 (14:47 IST)
நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார்.

கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலியின் அற்புதமான இன்னிங்ஸ் காலாகாலத்துக்கும் அவர் பேர் சொல்லும் ஒரு இன்னிங்ஸாக அமைந்துள்ளது, ஒரு கட்டத்தில் 31 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலியும் ஹர்திக் பாண்ட்யாவும் நிலைத்து நின்று விளையாடி மீட்டனர். அதிலும் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை இந்திய அணியின் வசமாக்கினார்.

இந்த இன்னிங்ஸ்க்காக  கோலியை கிரிக்கெட் உலகம் போற்றி கொண்டாடி தீர்த்த நிலையில் இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கோலியின் இன்னிங்ஸை பாராட்டி “இதுதான் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக இருக்கும்” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது ஒரு மாதம் கழித்து அந்த இன்னிங்ஸை பற்றி பதிவு செய்துள்ள கோலி “அந்த நாளை என் வாழ்க்கையில் எப்போதுமே நான் மறக்க மாட்டேன். அன்று போல என்றுமே நான் எனர்ஜியாக உணர்ந்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலையில் கவர்ந்திழுக்கும் நடிகை சினேகா - பியுட்டிபுல் போட்டோஸ்!