Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IND- AUS- 1st ODI- போட்டியை நேரில் கண்டுகளிக்கும் ரஜினிகாந்த்

Advertiesment
rajinikanath
, வெள்ளி, 17 மார்ச் 2023 (16:38 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸி அணியில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஸ்மித் 21 ரன்களிலும், ஜோஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனவே ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களும் விளையாடி வருகிறது.

இந்திய அணி சார்பில் ஷமி மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். ஜடேஜா 2 விக்கெட்டும், பாண்ட்யா 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் பார்த்து வருகிறார்.

இவரது நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் பட ஷூட்டிங் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்ல தொடக்கத்துக்குப் பிறகு சரியும் ஆஸி… 4 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர்கள்!