Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிதீஷ் & சுந்தர் நிதான ஆட்டம்… கௌரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா.. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்!

நிதீஷ் & சுந்தர் நிதான ஆட்டம்… கௌரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா.. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்!

vinoth

, சனி, 28 டிசம்பர் 2024 (10:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.

ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள்  ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணி நேற்று 164 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்திருந்தது. இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் 82 ரன்களும் கோலி 36 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்திருந்தனர். அதையடுத்து இன்று போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ரிஷப்  பண்ட் மற்றும் ஜடேஜா தங்கள் விக்கெட்களை இழந்தனர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க காரணமாக அமைந்தனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் நிதானமாக ஆடி தேநீர் இடைவேளைக்கு முன்பு வரை சிறப்பாக ஆடி ஸ்கோரை 326 ரன்களாக உயர்த்தினர். நிதீஷ் குமார் 85 ரன்களோடும் சுந்தர் 40 ரன்களோடும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முட்டாள்தனமான ஷாட்.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!