Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ட், சர்பராஸ் அபார ஆட்டம்… மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் பாதிப்பு…!

vinoth
சனி, 19 அக்டோபர் 2024 (13:38 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் டக் அவுட் ஆகி ஏமாற்றினர்.

இதனை அடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகின்றது. இந்திய அணியைப் போல தடுமாறாமல் நியுசிலாந்து வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் நேற்றைய ஆட்டமுடிவில் சேர்த்திருந்தனர். தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி 402 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டெழுந்து சிறப்பாக விளையாடி வருகிறது. அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 111 பந்துகளில் சதமடித்தார். அவரோடு இணைந்த ரிஷப் பண்ட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார். இந்திய அணி 344 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆடிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இந்திய அணி இன்னும் 12 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 அரைசதங்கள், ஒரு சதம்.. 2வது இன்னிங்ஸில் பதிலடி கொடுக்கும் இந்திய அணி..!

சர்பராஸ் கான் அதிரடி சதம்… இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழும் இந்தியா!

2வது இன்னிங்ஸ்ஸிலும் விக்கெட்டை இழந்த இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

ரச்சின் ரவீந்தரா சதம்!… வலுவான நிலையில் நியுசிலாந்து!

பாகுபலி போல இலங்கை அணியைத் தோளில் தூக்கி சுமக்கும் ஜெயசூர்யா.. அடுத்தடுத்து பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments