Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்பராஸ் கான் அதிரடி சதம்… இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழும் இந்தியா!

சர்பராஸ் கான் அதிரடி சதம்… இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழும் இந்தியா!

vinoth

, சனி, 19 அக்டோபர் 2024 (09:59 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் டக் அவுட் ஆகி ஏமாற்றினர்.

இதனை அடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகின்றது. இந்திய அணியைப் போல தடுமாறாமல் நியுசிலாந்து வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் நேற்றைய ஆட்டமுடிவில் சேர்த்திருந்தனர். தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி 402 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டெழுந்து சிறப்பாக விளையாடி வருகிறது. சிறப்பாக விளையாடி வரும் சர்பராஸ் கான் 111 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார். தற்போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 275 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ரிஷப் பண்ட் சர்பராஸ் கானோடு 11 ரன்களோடு ஆடிவருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது இன்னிங்ஸ்ஸிலும் விக்கெட்டை இழந்த இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?