இந்தியா vs தென் ஆப்பிரிக்கா… மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (15:24 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. கே எல் ராகுலின் அபாரமான சதத்தால் முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. கே எல் ராகுல் 122 ரன்களோடும், ரஹானே 40 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டுள்ளதால் உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. இன்னமும் மழை பெய்து வருவதால் போட்டி எப்போது தொடங்கும் என்பதும் அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் போட்டி.. நாளை முதல் ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை.. ஏன்?

பெங்களூரு மைதானத்தில் ஐபிஎல் போட்டி கிடையாதா? ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட் எது?

லீக் 20 மகளிர் கிரிக்கெட்!.. பெங்களூருக்கு 144 ரன் இலக்கு வைத்த உத்தரபிரதேசம்!...

ஒரே கிரிக்கெட் அணிக்காக விளையாடிய தந்தை - மகன்.. ஆச்சரியமான சாதனை..!

சதத்தை நூலிழையில் மிஸ் செய்த விராத் கோஹ்லி.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments