Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது இதுவே முதல் முறை... ரச்சின் ரவீந்தரா பூரிப்பு

vinoth
சனி, 23 மார்ச் 2024 (14:39 IST)
17 ஆவது ஐபில் சீசன்  நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்  தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதனால் இந்த போட்டி ரசிகர்களால் பெரியளவில் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து 173 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அணியில் அனைத்து  வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து  எளிதாக இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் சென்னை அணிக்காக முதல் முறையாகக் களமிறங்கிய நியுசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரவீந்தரா 15 பந்துகளில் 35 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். இதனால் சி எஸ்கே அணி இலக்கை எளிதாக துரத்தியது.

போட்டி முடிந்ததும் பேசிய ரவீந்தரா ‘நான் விளையாடியதிலேயே சேப்பாக்கம் மைதானம்தான் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட மைதானமாக உள்ளது. இவ்வளவு ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையில் நான் விளையாடுவது இதுவே முதல் முறை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments