Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்டர் கவாஸ்கர் ட்ராபியும் ஜெயிச்சிட்டா.. I am Finished..! - பேட் கம்மின்ஸின் ஆசை!

Prasanth Karthick
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (16:48 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான பார்டர் கவாஸ்கர் ட்ராபி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அதில் வெல்ல வேண்டும் என விரும்புவதாக ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. அதுவும் பார்டர் கவாஸ்கர் ட்ராபி என்றால் கூடுதல் பரபரப்பு எழுந்துவிடுகிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் ட்ராபி போல பார்டர் கவாஸ்கர் ட்ராபியும் பிரபலமான ஒன்றாகும்.

 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளின் ஜாம்பவான் கேப்டன்களான ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கர் பெயர்களை இணைத்து உருவானதுதான் பார்டர் கவாஸ்கர் ட்ராபி. இந்த போட்டிகளில் 2015க்கு பிறகு ஆஸ்திரேலியா ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை.

 

தொடர் வெற்றியில் இருக்கும் இந்திய அணி இந்த ஆண்டின் நவம்பர் மாதம் 22ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் ட்ராபி போட்டிக்காக செல்ல உள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் ட்ராபி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் “பார்டர் கவாஸ்கர் கோப்பையை நான் இதுவரை வென்றதில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. எனினும் எங்கள் அணியும் சிறப்பாக உள்ளது என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

உலகக்கோப்பையின் அத்தனை எடிசன்களிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நின்று வென்று காட்டிய பேட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் ட்ராபியையும் வெல்லும் முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா ஸ்டாண்ட் ஆப் காமெடியனா போகலாம்! - ஆஸி முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!

இதுவே தமிழ்நாடு ப்ளேயர் பண்ணிருந்தா தூக்கியிருப்பாங்க! - கில் பேட்டிங் குறித்து பத்ரிநாத் கடும் விமர்சனம்!

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments