Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி பற்றி எல்லை மீறி கமெண்ட் அடித்த ரசிகர்… கூலாக பதிலளித்த பாட் கம்மின்ஸ்!

vinoth
வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:38 IST)
ஐபிஎல் மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில்  துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரை அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதனால் அவர் மீது கிரிக்கெட் உலகின் கவனம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் அவர் தன் மனைவியுடன் சர்ஃபிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்த ஒரு குறும்புக்கார ரசிகர், “நான் உங்கள் மனைவியை காதலிக்கிறேன்’ என எல்லை மீறி கமெண்ட் செய்தார். அவருக்கு பதிலளித்த கம்மின்ஸ் “சரி, நான் அதை அவரிடம் தெரிவித்து விடுகிறேன்” எனக் கூலாக பதிலளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments