Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவை நோக்கி கான்பூர் டெஸ்ட்… நங்கூரம் பாய்ச்சிய நியுசிலாந்து!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:41 IST)
கான்பூர் டெஸ்ட்டின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நியுசிலாந்து வீரர்கள் நிதானமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடிவருகின்றனர்.

கான்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற நியுசிலாந்து அணி கடைசி நாளில் 280 ரன்கள் எடுக்கவேண்டும். இந்திய பிட்ச்களில் இது அசாத்தியமானது. அதனால் போட்டியை எப்படியாவது ட்ராவாவது செய்துவிட வேண்டும் என்ற முடிவோடு விக்கெட்டை இழக்காமல் ஆடி வருகின்றனர். நேற்றே முதல் விக்கெட் வீழ்ந்திருந்த நிலையில் இன்று காலை முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திண்டாடி வருகின்றனர்.

உணவு இடைவேளை வரை நியுசிலாந்து அணி 79 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது. இன்றைய முதல் செஷனில் இந்திய பவுலர்களால் ஒரு விக்கெடைக் கூட வீழ்த்த முடியவில்லை. இதனால் போட்டி டிராவை நோக்கி செல்ல அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments