Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் கடைசி வரை போராடிய மும்பை இந்தியன்ஸ்… நூலிழையில் தோல்வி!

vinoth
புதன், 1 மே 2024 (07:34 IST)
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி மிகவும் லோ ஸ்கோர் போட்டியாக இருந்தாலும் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அந்த அணியின் நெகல் வதேரா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் முறையே அதிகபட்சமாக 46 மற்றும் 35 ஆகிய ரன்களை சேர்த்தனர்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 145 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சீரான இடைவெளியில்  விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியினரும் கட்டுக்கோப்பாக பந்துவீசி வந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவரில் தான் இந்த இலக்கை எட்ட முடிந்தது. அந்த அணியின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments