விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருவது அறம் இல்லாதது… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அதிருப்தி!

vinoth
திங்கள், 15 செப்டம்பர் 2025 (12:45 IST)
அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளைக் கடந்த 15 ஆண்டுகளாக விளையாடுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலை அடுத்து இரு அணிகளும் நேற்று ஆசியக் கோப்பைத் தொடரில் மோதின.

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதே போல டாஸ் போட்டபோதும் இரு அணிக் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நூறாண்டு காலமாக நீடித்து வரும் வழக்கம்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி இது சம்மந்தமாகத் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் “இன்றைய போட்டியில் விளையாட்டின் அறம் கடைபிடிக்கப்படாமல் போனது ஏமாற்றத்துக்குரியது. விளையாட்டில் அரசியலைக் கலப்பது விளையாட்டின் உணர்வுக்கு நேரெதிரானது. இனிவரும் காலங்களிலாவது வெற்றி பெறும் அணிகள் பண்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments