Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணித் தேர்வை “சீப் செலக்‌ஷன்” என விமர்சித்த பாகிஸ்தான் வீரர்!

Advertiesment
அணித் தேர்வை “சீப் செலக்‌ஷன்” என விமர்சித்த பாகிஸ்தான் வீரர்!
, சனி, 17 செப்டம்பர் 2022 (08:59 IST)
டி 20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை இந்தியா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தால் அவதிபட்டு வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த அணி தேர்வு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் “தேர்வுக்குழு தலைவரின் மோசமான தேர்வு” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த காட்டமான விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது அமீர் சூதாட்ட புகாரில் சிக்கி, 6 ஆண்டுகள் தண்டனை பெற்று பின்னர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இணைந்து சமீபத்தில் தன்னுடைய 28 ஆவது வயதிலேயே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் அணி

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர் கருத்து