Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்… நேற்றைய போட்டியில் லக்னோ அணி படைத்த சாதனை!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (08:32 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 38-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின.  பஞ்சாப் அணி டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் கே.ஏல்.ராகுல் 12  ரன்களும், கேல் மேயர்ஸ்  54 ரன்களும், படோனி 43  ரன்களும், ஸ்டோனிஸ் 72  ரன்களும், பூரன் 45 ரன்களும் அடித்தனர். 20  ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்து, பஞ்சாப் அணிக்கு 258 ரன்கள் இலக்கு நிர்ணயித்தனர். இந்த ஸ்கோரானது ஐபிஎல் வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு பெங்களூர் அணி பூனே அணிக்கு எதிராக 263 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளது.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 201 ரன்கள் மட்டுமே சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments