Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசியாக கிரிஸ் கெயிலை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி

Advertiesment
கடைசியாக கிரிஸ் கெயிலை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி
, ஞாயிறு, 28 ஜனவரி 2018 (16:40 IST)
2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள வீரர்களை தேர்ந்தெடுக்க பெங்களூரில் இரண்டாவது நாளாக  ஏலம் நடைபெற்று வருகிறது.
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
 
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். டி20 போட்டியில் 20 சதங்கள் விளாசிய ஒரே வீரர், சிக்சர் மன்னன் என்று புகழப்படும் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லின் பெயர் நேற்று வாசிக்கப்பட்ட போது எல்லா அணிகளும் அமைதி காத்தன. சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட சரியாக ஆடவில்லை.  இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெயிலை, ஏலத்தில் அவரது அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு கூட எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை. 
 
ஆனால் மூன்றாவது முறையாக கிறிஸ் கெயிலை ஏலத்தில் அறிவித்த போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரது அடிப்படை ஏல தொகையான ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
 
இதன்மூலம் இந்த வருட ஐபிஎல் போட்டியில் கிரிஸ் கெயில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்குலி சாதனையை ஓரங்கட்டிய கோலி