Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைல் ஜேமிசன் அபாரம்… 4 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாற்றம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (14:44 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கைல் ஜாமிசன் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடருக்குப் பின் இன்று கான்பூரில் முதல் டெஸ்ட் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஆடவில்லை. இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டாஸை வென்ற இந்திய கேப்டன் அஜிங்க்யே ரஹானே பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார். இதையடுத்து இளம் வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த புஜாரா 26 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானேவோடு கூட்டணி அமைத்து அரைசதம் கடந்தார் சுப்மன் கில். 52 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க, சிறு இடைவெளியில் கேப்டன்ன் ரஹானே 35 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

தேநீர் இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்ரேயாஸ் 24 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments