ராகுல் டிராவிட் வரவால் அணி மாறுகிறாரா குமார் சங்ககரா..!

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (10:05 IST)
இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய ராகுல் டிராவிட் எந்தவொரு கோப்பையையும் வெல்லாமல் ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டுதானிருந்தார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியைக் கோப்பை வெல்லவைத்தார்.

அதன் பிறகு இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் டி 20 உலகக் கோப்பையை வெல்லவைத்தார். அந்த வெற்றியோடு அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த சங்ககரா அந்த அணியின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இப்போது அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கடந்த சீசனில் அந்த பொறுப்பில் கவுதம் கம்பீர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments