Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் கேப்டன் பதவி பறிப்பு? கங்குலி கொடுத்த விளக்கம்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (20:40 IST)
நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை என்று முன்னாள் கேப்டனும், முன்ளாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி  தெரிவித்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின்   நட்சத்திர வீரராகவும்,  கேப்டனாகவும் வலம் வலம் வந்தவர் விராட் கோலி. இவரது தலைமயிலான இந்திய அணி கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது வெளியேறி அதிர்ச்சியளித்தது.

இதனால் கோலியின் மீதான கேப்டன்சி மீது விமர்சனம் குவிந்தது. எனவே அவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் அன்று பார்மில் இல்லாதது போன்றவை எல்லாம் சேர்த்து அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது.

எனவே அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், அன்றைய காலத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கும் விராட் கோலி ராஜினாமாவுக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது.

இதுகுறித்து கங்குலி மனம் திறந்துள்ளார்.

நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை.டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. எனவே நான் கூறினேன். டி 20 போட்டிகளில் கேப்டனாக இருக்க விரும்பவில்லை எனில்,  டி20  மற்றும் ஒரு நாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீங்க விலகுவது நல்லது என்றேன் என்று கூறியுள்ளார்.

இவரது இக்கருத்தும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

யார்ரா அந்த பையன்? அசுர பாய்ச்சலில் அஸ்வானி குமார்..! முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments