Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தொடர் முழுவதும் நான் சிறப்பாக விளையாடினேன்.. ஆட்டநாயகன் கோலி!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (08:05 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி போட்டியை ட்ரா செய்ய முக்கியக்காரணியாக இருந்து 186 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் கோலி.

ஆட்டநாயகன் விருதைப் பெற்ற அவர் “உண்மையைச் சொல்வதென்றால், ஒரு வீரராக என்னிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் எனக்கு மிகவும் முக்கியம். நாக்பூரில் முதல் இன்னிங்ஸில் இருந்து நான் நன்றாக பேட்டிங் செய்வதாக உணர்ந்தேன். நீண்ட நேரம் பேட்டிங்கில் கவனம் செலுத்தினோம். நான் அதை ஒரு அளவிற்கு செய்தேன், ஆனால் கடந்த காலத்தில் நான் செய்த திறமைக்கு நிகராக அல்ல. அதற்காக கொஞ்சம் ஏமாற்றம்தான். நான் எப்படி விளையாட விரும்புகிறேனோ அவ்வாறே விளையாட முடியும். எனது தடுப்பாட்டத்தில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

நான் வெளியே சென்று யாரிடமாவது அவரின் கருத்து தவறு என்று நிரூபிக்கும் இடத்தில் இப்போது இல்லை. நான் ஏன் களத்தில் இருக்கிறேன் என்பதையும் நியாயப்படுத்த வேண்டும். நான் 60 ரன்கள் எடுத்தபோது, ​​நாங்கள் நேர்மறையாக விளையாட முடிவு செய்தோம். எனவே, நேரத்தை கடத்த விரும்பினோம். அவர்கள் பந்துவீச்சில் நன்றாக இருந்தார்கள் மற்றும் சில நல்ல களங்களை வைத்தார்கள். நாங்கள் கொஞ்சம் முன்னிலை பெற்றோம், எங்களுக்கு ஒருவித வாய்ப்பை வழங்கினோம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments