Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராத் கோஹ்லியின் 75வது சதம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

virat 100
, ஞாயிறு, 12 மார்ச் 2023 (12:45 IST)
விராத் கோஹ்லியின் 75வது சதம்.. ரசிகர்கள் வாழ்த்து..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து உள்ளதை அடுத்து இது அவரது 75வது சதமாகும் 
 
அகமதாபாத் மைதானத்தில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்தியா தற்போது முதல் இன்னிசை விளையாடி வருகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 395 ரன்கள் இந்திய அணி எடுத்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் சுப்மன் கில் சதமடித்துள்ள நிலையில் தற்போது விராட் கோலி சதம் அடர்த்தி அசத்து உள்ளார். 
 
ஏற்கனவே அவர் 74 சதம் அடித்துள்ள நிலையில் இன்றைய சதம் அவரது 75வது சதம் என்பதை அடுத்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நான்காவது நாளிலும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் ஓட முடிவடையாத நிலையில் இந்த டெஸ்ட் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் போட்டிக்கு நடுவே முதுகுவலிப் பிரச்சனையால் அவதிப்படும் இந்திய வீரர்!