Publish Date: Wed, 29 Dec 2021 (16:00 IST)
Updated Date: Wed, 29 Dec 2021 (16:01 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா நேற்றைய ஆட்டத்தின் போது காயமடைந்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா பந்துவீசிய போது கால் பிசகி காயமடைந்தார். இதனால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறி ஓய்வு எடுத்துக்கொண்டார். பின்னர் 60 ஆவது ஓவரின் போது பந்து வீச வந்தார்.
அப்போது இந்திய அணியின் கேப்டன் கோலி எங்களின் ராக் வந்துவிட்டார் என அவரை புகழ்ந்து பேசியது ஸ்டம்ப் மைக் வழியாக கேட்டது. அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.