Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸாக மாறிய கோலி – இமாலய சிக்ஸ்ர் விளாசி கூட்டத்தை அதிர வைத்த ரன் மெஷின்!

Advertiesment
நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸாக மாறிய கோலி – இமாலய சிக்ஸ்ர் விளாசி கூட்டத்தை அதிர வைத்த ரன் மெஷின்!
, திங்கள், 7 டிசம்பர் 2020 (11:42 IST)
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் அடித்து பலரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

நேற்று நடந்த டி 20 போட்டியை வென்று தொடரை வென்றார் கேப்டன் கோலி. இதன் மூலம் SENA என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் டி 20 தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதல் ஆஸ்திரேலியக் கேப்டனும் கோலிதான்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி 23 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து அதகளம் செய்தார். அதில் அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக டிவில்லியர்ஸ் போல ஸ்கூப் ஷாட்டில் அவர் அடித்த சிக்ஸர் அனைவருக்கும் வியப்பை அளித்தது. வழக்கமாக ஆர்த்தடாக்ஸ் ஷாட்கள் மட்டுமே விளையாடும் கோலி ஒரு வினாடி மிஸ்டர் 360 ஆக மாறியது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடம் நோக்கி நியுசிலாந்து? விண்டீஸை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி