Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியே சிரிப்பு.. ஆனா உள்ளே அழுகை- ஹர்திக் பாண்ட்யா பற்றி பீட்டர்சன் கமெண்ட்!

vinoth
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:41 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அதனால் அவர் டாஸ் போட செல்லும்போதும், களமிறங்கும் போது அவரை தாக்கி கடுமையாக ஏளனம் செய்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நேற்றைய சி எஸ் கே அணிக்கு எதிரான போட்டியிலும் இது தொடர்ந்தது. அதற்கேற்றார் போல ஹர்திக் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஹர்திக் பாண்ட்யா பற்றி பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “ டாஸ் போட வரும்போதோ அல்லது பேட் செய்ய வரும்போதோ ஹர்திக் பாண்ட்யா அதிகமாக சிரித்துக் கொண்டே வருகிறார். அதன் மூலம் தான் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்.  ஆனால் அவர் உண்மையில் வருத்தத்தில்தான் உள்ளார்.  ரசிகர்கள் அவரை தொடர்ந்து எதிப்பது அவரை மிகவும் பாதித்துள்ளது. இதுவே அவரின் ஆட்டம் மற்றும் கேப்டன்சியைப் பாதித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments