கோலியும் ரோஹித்தும் ஒருபோதும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது… கபில்தேவ் அதிரடி கருத்து!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:45 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தடாலடியான கருத்துகளை சொல்வதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. இந்த முறை உலகக் கோப்பை தொடர் பற்றி அவர் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “நீங்கள் உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்களை விட்டு அணிக்காக முடிவுகள் எடுக்க வேண்டும், மேலும் அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு குழு இருக்கிறதா? கண்டிப்பாக. நம்மிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “உங்கள் அணியின் தூண்களாக மாறும் இரண்டு வீரர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அணி அவர்களைச் சுற்றி சுழல்கிறது, ஆனால் நாம் அதை குறைந்தது 5-6 வீரர்களை உருவாக்க வேண்டும். அதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் விராட் மற்றும் ரோஹித்தை சார்ந்திருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன் வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments