Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

vinoth
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:23 IST)
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணி, இந்தியாவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது இதுவே முதல்முறை.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்து வரும் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்த போது மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயேக் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது மோனிமல் ஹாக் மற்றும் முஷ்புகிர் ரஹீம் ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்களும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments