Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னைக்கு சின்ன பையன்.. இன்னைக்கு..! ஐசிசி பட்டியல்! – மாஸ் காட்டிய கேன் வில்லியம்சன்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (11:25 IST)
இன்றுடன் இந்த ஆண்டு முடியும் நிலையில் இந்த ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது ஐசிசி.

கொரோனா போன்ற பிரச்சினைகளால் இந்த ஆண்டு மோசமான ஆண்டாகவே பலருக்கு அமைந்தாலும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் பல இன்னல்களுக்கு நடுவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது ஐசிசி.

தற்போது சிறந்த டெஸ்ட் பேட்மேன்களுக்கான தரவரிசையை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐசிசி “இது இப்படியாக தொடங்கி இப்படி முடிகிறது” என பதிவிட்டு கேன் வில்லியம்சனின் 20 வயது புகைப்படத்தையும், தரவரிசை பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியே பேட்ஸ்மேன்களில் 890 புள்ளிகள் பெற்று கேன் வில்லியம்சன் முதலிடம் பெற்றுள்ளார். 879 புள்ளிகள் பெற்று விராட் கோலி இரண்டாம் இடத்திலும், 877 புள்ளிகள் பெற்று ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். முதல் மூன்று இடத்தையுமே அந்த அணி கேப்டன்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments