அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

vinoth
வெள்ளி, 23 மே 2025 (14:47 IST)
கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 13 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று, ஒரு போட்டியில் முடிவின்றி 17 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இடம்பிடித்து ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என யூகிக்கப்படும் நிலையில், அந்த அணிக்கு அடுத்தடுத்துப் பெரும் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.  ஒரு வார ஒத்திவைப்பதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய போது அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தோள்பட்டை வலி காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஹேசில்வுட்டின் காயம் குணமடைந்துள்ளதாகவும் அவர் ப்ளே ஆஃப் போட்டிகளின் போது அணியில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது. பெங்களூர் அணி இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. கடைசி போட்டியில்  மே 27 ஆம் தேதி லக்னோ அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments