டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜடேஜா..

Arun Prasath
சனி, 5 அக்டோபர் 2019 (11:11 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், முதல் போட்டியின் மூன்றாம் நாளில், ரவீந்திர ஜடேஜா, எல்கர் விக்கெட்டை எடுத்தார். இந்த விக்கெட்டின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 200 ஆவது விக்கெட்டை எடுத்துள்ளார். 44 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்தவர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களுக்கு மேல் எடுத்த 2 ஆவது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக அஸ்வீன் 37 டெஸ்ட்களில் 200 விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments