நான்காவது டெஸ்ட்டில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா?

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (10:20 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எல் பரத்துக்குப் பதில் இளம் வீரரான இஷான் கிஷான் களமிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 3 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்ட பரத், மோசமான பேட்டிங் செயல்திறனையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நடந்தால் இஷான் கிஷானிடம் முதல் டெஸ்ட் போட்டியாக அமையும்.

சமீபத்தில் இஷான் கிஷான் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இஷான் கிஷான் 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலேயே  இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments