இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷான் மனச்சோர்வு என்று சொல்லி அந்த தொடரில் இருந்து விடுப்பு கேட்டு வெளியேறினார். ஆனால் உண்மையில் அவர் தொட்ரந்து பென்ச்சில் உட்காரவைக்கப்படுவதால்தான் அதிருப்தியில் வெளியேறினார் என சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் நடந்த ரஞ்சி கோப்பை தொடரிலும் விளையாடவில்லை. ஆனால் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாடவேண்டும் என்ற விதியை அறிவுறுத்தியும் கூட அவர் விளையாடவில்லை. இதனால் அவருக்கான ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இளம் வீரரான இஷான் கிஷான் பிசிசிஐயுடன் மோதல் போக்கில் செயல்பட்டால் அவர் எதிர்காலத்துக்குதான் பாதிப்பு என்று பலரும் அவருக்கு அறிவுரைக் கூறிவந்தனர்.
இந்நிலையில் இப்போது தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி கவுன்சிலிங் கொடுத்ததாகவும், அதைக் கேட்டு அவர் துலிப் கோப்பை தொடரில் விளையாட சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.