Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை அடிச்ச இந்திய அணியா இது? ஜிம்பாப்வேவிடம் தோல்வி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Prasanth Karthick
ஞாயிறு, 7 ஜூலை 2024 (09:23 IST)

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான டி20 தொடர் தொடங்கியுள்ள நிலையில் முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகக்கோப்பை டி20 தொடர் முடிந்த கையோடு இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான டி20 தொடர் தொடங்கியுள்ளது. நேற்று ஜிம்பாப்வே ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் மைதானத்தில் நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதிக் கொண்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களே எடுத்தது.

பின்னர் சேஸிங்கில் இந்தியா இதை எளிதாக சேஸ் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சிகரமாக ஆரம்பம் முதலே இந்தியாவின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழத் தொடங்கின. இதனால் இந்திய அணி 19.5 ஓவர்களிலேயே 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷுப்மன் கில் (31), வாஷ்ங்டன் சுந்தர் (27) மட்டுமே ஓரளவு ரன்களை குவித்தனர்.

உலகக்கோப்பைக்கு பின் சர்வதேச டி20களில் ஜடேஜா, ரோகித் சர்மா, கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்த நிலையில் தற்போது ஷுப்மன் கில் தலைமையிலான புதிய அணி விளையாடுவதால் இந்த தோல்வி நிகழ்ந்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். புதிய வீரர்கள், புதிய அணி விரைவில் சூழலை கையாளும் திறமை பெற்று வெற்றிகளை குவிக்க தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற முடியாத ஜிம்பாப்வேயிடம், உலக கோப்பை சாம்பியனான இந்தியா தோற்றது பலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments