Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL-2024: சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Sinoj
புதன், 27 மார்ச் 2024 (16:09 IST)
ஐபிஎல்-2024 தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தாண்டு 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் நேற்றைய சென்னை கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விதிமுறையை மீறிய சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது சென்னைக்கு எதிரான இன்னிங்ஸில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்  20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே சீசனின் முதல் முறையாக மெதுவாக பந்து சீசிய தவற்றை குஜராத் அணி செய்துள்ளதால், மொத்த அணிக்கும் அபராதம் விதிக்காமல், கேப்டனுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
நேற்றைய போட்டியில்  சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை குஜராத் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.  ஆனால் 20 ஓவரில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.  நேற்றைய போட்டியில் பெரிய வெற்றியைப் பதிவு செய்த சென்னை கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments