Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டது....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (17:09 IST)
இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா- ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையேயான தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற வேண்டிய டி20 போட்டி நாளை நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் க்ருணால் பாண்டியா தவிர மற்ற வீரர்களுக்கும் கொரோனா இல்லை என்றும் இருப்பினும் அனைத்து வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் சோதனை செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் அதன் காரணமாக போட்டி ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் வீரர் ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் குணம் அடைந்தார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் இருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் IND vs Sl போட்டி ரட்த்து செய்யப்பட்டு அனைத்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் எப்போது  போட்டிகள் நடக்கும் என்பதை ஐசிசி அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments