Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாடா இந்த அம்பயர் இல்லையா?… குஷியில் துள்ளிக் குதிக்கும் இந்திய ரசிகர்கள்!

vinoth
வியாழன், 27 ஜூன் 2024 (07:10 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் இருந்து அடுத்த கட்டத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று காலை முதல் அரையிறுதிப் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது.

அதன் பின்னர் இன்றிரவு நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் கள நடுவர்களாக கிறிஸ் கஃபானே மற்றும் ராட் டக்கர் ஆகிய இருவரும் செயல்படுவார்கள் என்றும், 3வது அம்பயராக ஜோயல் வில்சன் மற்ரும் பவு ரெய்ஃபல் 4வது அம்பயராகவும் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய அணிக்காக போட்டியில் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ இல்லாதது இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்தியா விளையாடிய நாக் அவுட் போட்டிகளில் அவர் நடுவராக இருந்த அனைத்துப் போட்டிகளையும் தோற்றுள்ளது. அதனால் அவரை இந்திய ரசிகர்கள் ராசியில்லாத நடுவர் என முத்திரைக் குத்தியுள்ளனர். இந்த நாக் அவுட் போட்டியில் அவர் இல்லாததே பெரிய விஷயம்தான் எனக் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்.! பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு..!!

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments