Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (10:21 IST)
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இன்று ராஜ்கோட்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆசியக் கோப்பைத் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் தொடக்க ஆட்டக்காரர் தவான் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. இந்தியா இந்த போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களோடு களம் இறங்குகிறது.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பிரித்வி ஷாவும் புஜாராவும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

இந்திய அணி: லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, வீராட் கோலி (கே), ரஹானே, ரிஷப் பாண்ட் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ்.

மே.இ.தீவுகள்: பிராதவெயிட் (கே), கைரன் பவல், ஷிம்ரன் ஹெட்மைர், ஷை ஹோப், ராஸ்டன் ச்சேஸ், சுனில் அம்ப்ரீஸ், ஷேன் டோவ்ரிக் (கீப்பர்), கீமோ பால், தேவேந்திர பிஷூ, ஷெர்மென் லெவிஸ், ஷெனான் கேப்ரியல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments