பெண் விவகார செட்டில்மெண்ட்: எக்குத்தப்பாய் சிக்கிய பிரபலம்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (17:36 IST)
கால்பந்து உலகின் சூப்பர் ப்ளேயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். எனவே, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காகவும், யுவென்டஸ் கிளப் அணிக்காகவும் கால்பந்து விளையாடி வருகிறார். அவர் மீது கேத்தரின் மயோர்கா என்ர பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். 
 
அதாவது, 2009 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை யாரிடமும் கூறாமல் இருக்க 3,75,000 அமெரிக்க டாலர்கள் தருவதாகவும் ரொனால்டோவின் வழக்கறிஞர்கள் கூறியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். 
 
இதனால், இந்த புகாரை குறித்து விசாரிக்க லாஸ் வேகாஸ் போலீஸார் ரொனால்டோ மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து ரொனால்டோ, இது பொய்யான குற்றச்சாட்டு, எனது பெயரை கெடுக்க இதுபோன்று செய்யப்படுகிரது என வருத்தம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்