Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதாக நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா… தோல்வியே இல்லாமல் அரையிறுதிக்கு தகுதி!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (07:11 IST)
உலகக் கோப்பையின் இறுதி லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும் அடித்தனர், ஸ்ரேயாஷ் அய்யர் இன்று தீபாவளிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி மாதிரி   நெதர்லாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து துவம் செய்தார்.  அவர் 94 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து அசத்தினர். இதில், 5 சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் அடக்கம். கே எல் ராகுலும் 64 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 410 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 250 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி சார்பாக பூம்ரா, சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்த, கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி லீக் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் அரையிறுதி போட்டிக்கு செல்கிறது. புதன் கிழமை நியுசிலாந்து அணியை இந்தியா மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments