தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டியின் லீக் சுற்று இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. க்ரூப் 1 ல் விளையாடிய நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2ல் விளையாடிய பாகிஸ்தான் அணியும் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன.
லீக் போட்டியின் கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்துள்ளது.
ரோகித் சர்மா 15 ரன்கள், விராட் கோலி 26 ரன்களில் வெளியேறினாலும், கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஸ்கோர் நிலவரத்தை சமாளித்து வந்தார். நான்காவதாக இறங்கிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 61 ரன்களை குவித்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்.
அடுத்ததாக 187 ரன்கள் என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது. இந்தியா தனது பீல்டிங்கால் அவர்களை முறியடிக்குமா என எதிர்பார்க்கபடுகிறது.